வெளியிடப்பட்ட நேரம்: 16:01 (01/03/2017)

கடைசி தொடர்பு:16:05 (01/03/2017)

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிறுவன் உயிரிழந்த சோகம்

நெல்லை மாவட்டம், கடையநல்லூரில் மர்மக் காய்ச்சலுக்கு ஹபீஸ் என்ற 7 வயது சிறுவன் உயிரிழந்தான்.

கடந்த சில நாள்களாக காய்ச்சல் காரணமாக கடையநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹபீஸ் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிச்சை முடித்து வீடு திரும்பிய நிலையில், மீண்டும் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக சிறுவன் ஹபீஸ் உயிரிழந்தான். இதனால், அப்பகுதியில் பரவும் மர்மக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

- ஆண்டனிராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க