வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (02/03/2017)

கடைசி தொடர்பு:16:31 (02/03/2017)

ஸ்டான்லி மருத்துவமனையில் குழந்தையைக் கடத்திய பெண்ணுக்கு வலைவீச்சு

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மூன்று வயது குழந்தை ஹாசீப் காணாமல் போனதாக தாய் உசேனாபானு நேற்று புகார் அளித்திருந்தார். தைராய்டு சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த உசேனாபானு, கூட்டம் அதிகமாக இருந்ததால், ஹாசீப்பை உட்கார வைத்துவிட்டு, வரிசையில் நின்றிந்தார். சிறிது நேரம் கழித்து ஹாசீப் அந்த இடத்தில் இல்லாததைக் கண்டு அதிர்ந்த உசேனாபானு, போலீசில் புகாரளித்தார். பிஸ்கெட் கொடுத்துக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

Stanley hospital

 குழந்தையைக் கடத்தியது 50 வயது பெண் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, குழந்தையைக் கடத்திய பெண்ணைத் தேடி வருகி்ன்றனர்.  குழந்தைக் கடத்தல் குறித்து காவல்துறையினர் ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க