வெளியிடப்பட்ட நேரம்: 10:45 (02/03/2017)

கடைசி தொடர்பு:11:25 (02/03/2017)

புழல் சிறையில் 98 கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்!

சென்னை புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில், 98 கைதிகள் பிளஸ் 2 தேர்வை எழுதுகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வை, 9.33 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில், பள்ளி மாணவர்களைத் தவிர 34,868 தனித்தேர்வர்களும் அடங்குவர். இந்தத் தேர்வு, தமிழ் உள்பட பத்து மொழிகளில் மாணவர்கள் எழுதுகிறார்கள்.

இதனிடையே, 98 கைதிகள் புழல் சிறையில் உள்ள தேர்வு மையத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். புழல் சிறையில் தண்டனைக் கைதிகள் 20 பேரும், விசாரணைக் கைதிகள் நான்கு பேரும், திருச்சியில் 15 பேரும், கோவையில் இருந்து 13 பேரும்,  மதுரையில் இருந்து 11 பேரும், பாளையங்கோட்டையில் இருந்து 10 பேரும் கடலூரில் இருந்து 3 பேரும், புதுக்கோட்டையில் இருந்து 5 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க