ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்காது! சொல்கிறார், பொன்.ராதாகிருஷ்ணன்

'ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்காது' என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராடிவருகின்றனர். 15-வது நாளாக இன்றும் போராட்டம் தொடர்ந்துவருகிறது. இதனிடையே, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்காது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

இந்நிலையில், ஓசூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்காது என்றும், மக்கள் விரும்பினால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்தத் தயார் என்றும் கூறினார்.

2007-ல் வந்த திட்டத்துக்கு தற்போது எதிர்ப்பு ஏற்படக் காரணம், தமிழக அரசின் பலவீனமே என்று குற்றம்சாட்டிய அமைச்சர், திட்டம்பற்றி மக்களுக்கு மாநில அரசு புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!