வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (02/03/2017)

கடைசி தொடர்பு:15:19 (02/03/2017)

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு அனுமதி! உயர்நீதிமன்றம் உத்தரவு

நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கியுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் கங்கைகொண்டானில் அமைந்துள்ள குளிர்பான ஆலைகள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த  வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த நவம்பர் மாதம் தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனை எதிர்த்து குளிர்பான ஆலைகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாமிரபரணியில் இருந்து வெளியேறும் உபரி நீரை மட்டுமே பயன்படுத்துகிறோம் என்றும், இதனால் தாமிபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், தாமிபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க