பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருந்தால்... எச்சரிக்கும் அ.தி.மு.க எம்பி!

Navaneethakrishnan

அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி. நவநீதகிருஷ்ணன் இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், 'தண்டனைபெற்றவர்கள் கட்சித் தலைவராக இருக்கக்கூடாது என எந்த விதியும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருந்தால், நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும். ஜெயலலிதா மரணம் பற்றி பன்னீர்செல்வம் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்' என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைக் கோரி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 8-ம் தேதி உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், ஓ.பி.எஸ் உண்ணாவிரதம் இருந்தால் நீதிமன்ற அவமதிப்பைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்று நவநீதகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!