ரேஷனில் பொருள்கள் தட்டுப்பாடு இல்லை! சொல்கிறார் அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் எள்ளவும் தட்டுப்பாடு என்பது இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ், பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ரேஷன் பொருள்கள் வழங்குவதில் தட்டுப்பாடு என்பது எள்ளவும் இல்லை என்று திட்டவட்டமாக கூறிய அமைச்சர், சிலர், உள்நோக்கத்துடன் தேவையில்லாத, வதந்திகளைப் பரப்புகின்றனர் என்றும், விலையில்லா அரசி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!