கோவையில் 4.5 கிலோ தங்கம் கொள்ளை | 4.5 kg gold robbery in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 18:07 (02/03/2017)

கடைசி தொடர்பு:19:55 (02/03/2017)

கோவையில் 4.5 கிலோ தங்கம் கொள்ளை

Coimbatore

கோவையில் பட்டப்பகலில் தங்க நகைக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி ஒரு கோடியே 35 இலட்ச ரூபாய் மதிப்பிலான 4.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore

கோவை பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவர், ராஜ வீதி பகுதியில் ஸித்தி என்ற பெயரில் மொத்த தங்க நகைக் கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் ஓட்டுநர் ரியாசுதின் உள்ளிட்ட நான்கு பேர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், இன்று மாலை சந்திரசேகர் சாப்பிட வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், கடையில் கீதா, ரேவதி என்ற இரு பெண்கள் பணியில் இருந்துள்ளனர். அப்போது, ஒட்டுநர் ரியாசுதின் மற்றும் முகமூடி அணிந்து வந்த இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களை கண்ணை மூட சொல்லியுள்ளனர். இதையடுத்து கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 4.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் மதிப்பு ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் இருக்குமெனவும் கூறப்படுகிறது. மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில், வெரைட்டி ஹால் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ளனர். மேலும் பக்கத்து கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தங்க நகை கடைகள் நிறைந்த ராஜா வீதியில் கத்தி முனையில் 4.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-தி.விஜய்

நீங்க எப்படி பீல் பண்றீங்க