ஜெயலலிதா மரணத்தை விமர்சிப்பது நாகரிகமற்ற செயல் - திண்டுக்கல் சீனிவாசன் 

அரசியல் காரணங்களுக்காக ஜெயலலிதா மரணத்தை விமர்சிப்பது மனிதாபிமானம் அற்ற செயல் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டார் என்று டிஸ்சார்ஜ் அறிக்கையில் உள்ளதாகவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் நீடித்து வருவதால், அது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பி.எச்.பாண்டியனும், மனோஜ் பாண்டியனும் ஜெயலலிதா மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார். சில அரசியல் காரணங்களுக்காக, ஜெயலலிதா மரணத்தை விமர்சிப்பது மனிதாபிமானத்துக்கு விரோதமானது என்றும் அவர் குறிப்பிட்டார். ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளித்த சிகிச்சை விவரத்தை மருத்துவர்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளனர் என்றும் சீனிவாசன் குறிப்பிட்டார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!