ரயில் நிலையத்தில் தீ! அலறிய பயணிகள்

இன்று மாலை, சுமார்  7.45 மணியளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள மேம்பால நடைபாலத்தின் அடியில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. தீ விபத்தோ என அஞ்சிய ரயில் பயணிகள், அந்த இடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, அது குப்பைகளை எரிக்க மூட்டப்பட்ட தீ எனத் தெரியவந்தது. குப்பைகள் அனைத்தும் அந்த இடத்தில் சேர்க்கப்பட்டு தீ மூட்டப்பட்டிருந்தது. அதற்கு அருகில் குப்பை மூட்டைகளும் காணப்பட்டன.

இந்தத் தீயை மூட்டியது, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் துப்புரவுத் தொழிலாளர்களா என்பது தெரியவில்லை. அப்படி இருந்தால், குப்பைகளை இப்படிப் பயணிகளிக்கு இடையூறாக எரிக்க ரயில் நிர்வாகம் எப்படி அனுமதித்தது என்பது கேள்வியாக இருக்கிறது.

ரயில் பயணிகள் பெரும்பாலானோர், மூக்கை மூடியபடியே அந்தத் தீயைக் கடந்துசெல்கிறார்கள். பொது இடமான ரயில் நிலையத்தில், அதுவும் கூட்டம் அதிகம் புழங்கும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இப்படிப் பொது வெளியில் குப்பைகளைத்  தீ வைத்து எரிப்பது பொது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவது  மட்டுமில்லாமல், பல்வேறு விபத்துகளுக்கும் காரணமாக  அமையலாம்.

- செ.கிஸோர் பிரசாத் கிரண்

படங்கள் : ஜித்தேந்திரன் நளினி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!