வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (03/03/2017)

கடைசி தொடர்பு:11:50 (03/03/2017)

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கா? மத்திய அமைச்சர் ஜவடேகர் பதில்

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்துக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர, நாடு முழுவதும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்துகிறது. இந்தத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில், இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நீட் தேர்வுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த ஜவடேகர், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதுகுறித்து கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க