விளையாடச் சென்ற இடத்தில் உயிரிழந்த கிரிக்கெட் வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!


தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் சென்ற சென்னை மாணவர் ஸ்ரீகல்யாண் ராமன், அங்குள்ள நர்மதா ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் நிவாரண நிதியை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் சார்பில் தேசிய அளவிலான 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் 30.5.2016 முதல் 4.6.2016 வரை மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்றது. விருகம்பாக்கத்திலுள்ள A.V.M. இராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்ற மாணவர் ஸ்ரீ கல்யாண் ராமன், இப்போட்டியில் கலந்து கொள்ள இந்தூருக்கு சென்றார். அப்போது நர்மதா ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மாணவர் ஸ்ரீ கல்யாண் ராமனை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், உயிரிழந்த மாணவர் ஸ்ரீ கல்யாண் ராமன்  குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை முதலமைச்சர் இன்று (3.3.2017) அம்மாணவனின் தந்தை கணபதி ஜெயராமனிடம் வழங்கினார்" என்று கூறப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!