ஓ.பன்னீர்செல்வம் அணியில் அடுத்த விக்கெட்!

ஓ. பன்னீர்செல்வத்தின் அணியில் இருந்து மேலும் ஒருவர் விலகியுள்ளார். தற்போது, தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வீணை காயத்திரி ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவர் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில், சசிகலா அணியில் இணைந்துள்ளார்.  ஏற்கெனவே இன்று காலை நெல்லை மாவட்டம், செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் செல்லப்பா மற்றும் கடையநல்லூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ஹனீஸ் ஆகியோர் டி..டி.வி.தினகரன் முன்னிலையில் சசிகலா அணியில் இணைந்தனர்.

Veenaii Gayathiri

இன்று நடந்த எம்பிக்கள் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!