'கச்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்னைக்குத் தீர்வு': மோடிக்கு, முதல்வர் கடிதம்! | CM Edappadi Palanisami writes letter to PM Modi in Fishermen issue

வெளியிடப்பட்ட நேரம்: 17:39 (03/03/2017)

கடைசி தொடர்பு:17:44 (03/03/2017)

'கச்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்னைக்குத் தீர்வு': மோடிக்கு, முதல்வர் கடிதம்!

இலங்கைச் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

CM Edappadipalanisami with Modi

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், 'இலங்கைச் சிறையில் உள்ள 53 மீனவர்கள் மற்றும் 123 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று மட்டும் 13 மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து வரம்பு மீறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வாக அமையும். குறிப்பாக கச்சத்தீவு அந்தோணியர் திருவிழா ஒரு வாரத்தில் நடைபெற உள்ளது.

எனவே, அதற்குள் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் மீனவர்கள் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்ற முடியும்' எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க