ராதாரவிக்கு கனிமொழி கண்டனம்!

நடிகர் ராதாரவி, அண்மையில் அ.தி.மு.க - வில் இருந்து விலகி, தி.மு.கவில் இணைந்தார். அவரை, கட்சியில் சேர்த்ததைக் கட்சியினரே சமூக வலைதளங்களில் விமர்சித்துவந்தனர்.

இந்நிலையில், அவர் அ.தி.மு.க-வில் இருந்தபோது, ஒரு மேடையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் ஆகியோரை மாற்றுத்திறனாளிகளுடன் ஒப்பிட்டு கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Kanimozhi

இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள்குறித்து அவர் பேசிய பேச்சை, மகளிரணிச் செயலாளரான கனிமொழி விமர்சித்துள்ளார். இதுகுறித்து, கனிமொழி தனது முகநூல் பக்கத்தில், 'மாற்றுத்திறனானிகள் குறித்து இகழ்ச்சியாகப் பேசுவதை, ராதாரவி நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இதைக் கருணாநிதியின் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உடல் கூறுகள் வேறுபட்டு இருப்பது சிறிய தடைதான். மன ஊனம்தான் பெரியதடை. மாற்றுத்திறனாளிகள், மன ஊனத்தை உடைத்தவர்கள்' எனக் கூறியுள்ளார்.


ராதாரவியின் இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
 

- ஆண்டனிராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!