வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (04/03/2017)

கடைசி தொடர்பு:16:05 (04/03/2017)

அ.தி.மு.க கவுன்சிலருக்கு 3.78 கோடி ரூபாய் சொத்து! ஐ.டி விசாரணை

2015 -ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது கவுன்சிலர் என்ற முறையில் அண்ணாமலை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று, 196-வது வார்டு பகுதியைச் சேர்ந்த பொன் தங்கவேல் தொடர்ந்த வழக்கில், தற்போது திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம் அதிமுக கவுன்சிலர் அண்ணாமலைக்கு  3.78 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளதாக, பொன் தங்கவேல் தொடர்ந்த வழக்கில்,  வருமான வரித்துறை பதில் அளித்துள்ளது. ஆனால், மாநகராட்சி வேட்பு மனுவில், தமக்கு சொத்து இல்லை என அண்ணாமலை ஏற்கெனவே கூறியிருந்தார்.

அண்ணாமலைக்கு அதிக சொத்து இருப்பதாக தங்கவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி வருமான வரித்துறை அதிகாரிகள், கவுன்சிலர் அண்ணாமலையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க