மெத்தன சிகிச்சை...கொதித்தெழுந்த மாணவர்கள்!

ருத்துவத்தில் நடக்கும் மல்லுக்கட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.  கடந்த 27ம் தேதி இரவு புழல் பகுதியைச் சேர்ந்த கருணாகரன் எனபவர் விபத்தில் சிக்கிக்  கொண்டார்.

பதறித் துடித்தபடி அவரது பெற்றோர்களும். உறவினர்களும் ஆம்புலன்சில் அள்ளிப்  போட்டுக் கொண்டு சென்னை ஜி.ஹெச்க்கு விரைந்துள்ளனர். அங்கிருந்த பயிற்சி  மருத்துவ மாணவர்கள் சிகிச்சையில் மெத்தனம் காட்ட... மறுநாள் அதிகாலை 3 மணி  அளவில் பரிதாபமாக உயிரைவிட்டுள்ளார் கருணாகரன்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவரது பெற்றோரும், உறவினர்களும் அங்கிருந்த  கண்ணாடி அறைகளை அடித்து நொறுக்கியதோடு, மருத்துவக் கல்லூரி மாணவர்களை  தாக்கியுள்ளனர்.

கொதித்தெழுந்த மாணவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே புறக்கணிப்பில் இறங்க...  விவகாரம் விஸ்வரூபம எடுக்கத் தொடங்கியது.

ஏற்கனவே மூவரை கைது செய்து வீட்டோம், மீதமுள்ளவர்களையும் கைது செய்கிறோம்  என்று காக்கிகள் கெஞ்ச... நீண்ட முறுக்கலுக்கு பிறகு புறக்கணிப்பை கைவிட்ட  மாணவர்கள், அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கமிஷனரை சந்தித்து  மனு கொடுத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!