வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (05/03/2017)

கடைசி தொடர்பு:08:10 (05/03/2017)

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

Petrol pump

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியதால் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் மீதான வாட் வரி, 27 சதவிகிதத்தில் இருந்து 34 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி 21.43 சதவிகிதத்தில் இருந்து 24 சதவிகிதமாக அதிகமாகி இருக்கிறது. இதனால், டீசல் விலை லிட்டருக்கு 1.76 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.78 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க