வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (05/03/2017)

கடைசி தொடர்பு:11:29 (05/03/2017)

தாமிரபரணி தீர்ப்பு: நெல்லையில் உண்ணாவிரதம்!

nellai

நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் உள்ளிட்ட குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சில நாட்களுக்கு முன்பு நீக்கியது. 

திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் தொடுத்திருந்த பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு அந்தத் தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான தாமிரபரணி ஆற்றை தனியார் குளிர்பான நிறுவனங்களுக்குத் தாரைவார்க்க அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கையுடன் நெல்லையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். சமூக வலைதளங்கள் மூலமாக இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு நடந்து வருகிறது. 

ஆண்டனிராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க