கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல்... முதல்வரை விளாசும் மு.க.ஸ்டாலின்!

''இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் மீட்பதற்கு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை'' என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை அரசின் பிடிவாதத்தின் காரணமாக 85 மீனவர்களையும் 128 படகுகளையும் சிறைபிடித்து வைத்துள்ளது. மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக அரசு கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல், மீன்வளத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சரைச் சந்தித்து பிரச்னை குறித்து வலியுறுத்த வேண்டும். இந்திய அரசுத் தூதரக அதிகாரிகளுக்கு அழுத்தம்கொடுத்து, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!