வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (06/03/2017)

கடைசி தொடர்பு:14:59 (06/03/2017)

தாமிரபரணியில் நீர் எடுக்கும் விவகாரத்தில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தாமிரபரணி ஆற்றில் இருந்து பன்னாட்டு குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க அனுமதி வழங்கியதை ரத்து செய்யக்கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி கங்கை கொண்டான் சிப்காட்டில் அமைந்துள்ள பெப்சி, கோக் குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்தத் தடையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கியது. இந்த உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி திருநெல்வேலியில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுப்பதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சார்பில் நூற்றுக்கணக்கானோர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- ஆண்டனிராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க