வெளியிடப்பட்ட நேரம்: 14:46 (06/03/2017)

கடைசி தொடர்பு:15:37 (06/03/2017)

முல்லைப்பெரியாறு அணைக்குச் செல்ல அனுமதி மறுப்பு! பி.ஆர்.பாண்டியன்- போலீஸ் கடும் வாக்குவாதம்

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு அமைத்து வரும் கார் பார்க்கிங்கை பார்வையிட விவசாயிகளுடன் சென்ற விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியனை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் பார்க்கிங் அமைத்துக் கொள்ள கேரள அரசு அனுமதி பெற்றது. இதைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கேரள அரசு பார்க்கிங் அமைத்து வருகிறது.

இதனைக் கண்டித்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள், இன்று முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் அமைத்து வரும் பார்க்கிங் பகுதிக்குச் செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், அவர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடும்வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, தமிழக எல்லையான குமுளியில் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய பி.ஆர்.பாண்டியன், தமிழர்களை கேரள அரசு வஞ்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

செய்தி, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க