அந்நியச் செலாவணி வழக்கு: உச்ச நீதிமன்றத்தை அணுக தினகரன் முடிவு

ttv.dinakaran

அந்நியச் செலாவணி தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தை அணுக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் முடிவு செய்துள்ளார். 

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 1995, 1996-ம் ஆண்டுகளில் தினகரனின் வங்கிக் கணக்குகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் பாய்ந்தன. 'தான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர்' என தினகரன் வாதிட்டதை அமலாக்கத்துறை ஏற்காமல் நிராகரித்தது. தொடர்ந்து அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறை, தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. இதை ரத்து செய்வது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தினகரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், தற்போது உச்சநீதிமன்றத்தை அணுக அவர் முடிவு செய்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!