வெளியிடப்பட்ட நேரம்: 15:53 (06/03/2017)

கடைசி தொடர்பு:15:55 (06/03/2017)

நடிகர்கள் செந்தில், குண்டுகல்யாணத்துடன் ஆலோசனை நடத்திய டி.டி.வி.தினகரன்

நடிகர்கள் செந்தில், குண்டுகல்யாணம் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று ஆலோசனை நடத்தினார்.

நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர் அனிதா குப்புசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.கே.ரிதீஷ், கட்சியின் செய்தித் தொடர்புக் குழு உறுப்பினர் கௌரி சங்கரன், அரியலூர் மாவட்டச் செயலாளரும், அரசு தலைமைக் கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் இன்று கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்து கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை பெற்றனர்.

இதேபோல் கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் செந்தில், குண்டுகல்யாணம் ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்தனர். அப்போது, பொதுக்கூட்டங்களில் ஆற்றவேண்டிய உரைகள் குறித்த ஆலோசனையை அவர்களுக்கு, தினகரன் வழங்கினார்.    

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க