'மயக்க நிலையில் இருந்தார் ஜெயலலிதா' - எய்ம்ஸ் அறிக்கை பற்றி தமிழக அரசு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அளிக்கப்பட்ட எய்ம்ஸ் அறிக்கை பற்றி, தமிழக அரசு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 'செப்டம்பர் 22-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, மயக்க நிலையில் இருந்தார். இரவு 10 மணிக்கு அவர் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டார். நீர்சத்து , நீரிழிவு உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் ஜெயலலிதா. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது.

அப்போலோவில் காவிரிப் பிரச்னை பற்றி விவாதித்தார். அவரைக் காப்பாற்ற அனைத்து மருத்துவ முயற்சிகளும் எடுக்கப்பட்டது. உலகத் தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவரது இதயம் செயலிழந்தது குறித்து ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரிகள் உட்பட்டோருக்கு தெரிவிக்கப்பட்டது' என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!