வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (07/03/2017)

கடைசி தொடர்பு:15:03 (07/03/2017)

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ கவுன்சில் விளக்கம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தத் தவறும் இல்லை என்று இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

Jayalalithaa
 

ஜெயலலிதா மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்களைப் பற்றி விளக்கம் அளித்துள்ள மருத்துவ சங்கம், ’மோசமான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும், அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சிகிச்சை அளித்த 31 மருத்துவர்களும் தவறாகக் கூறுவார்களா’ என்று குறிப்பிட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க