வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (07/03/2017)

கடைசி தொடர்பு:14:27 (07/03/2017)

ஆட்சியருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி! ராமேஸ்வரத்தில் தொடர்கிறது போராட்டம்..!

Fishermen protest

நேற்றிரவு ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 22 வயதான பிரிட்ஜோ பலியானார். மீனவர்கள் சிலரும் காயமடைந்தனர். இதையடுத்து, பிரிட்ஜோ இறப்புக்குக் காரணமான இலங்கை கடற்படையினரை கைது செய்யக் கோரியும் மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதை கண்டித்தும் தங்கிச்சிமடம் பகுதியில் மீனவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இதையடுத்து, தங்கச்சிமடம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்களுடன் மாவட்ட ஆட்சியர் நடராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, 'மத்திய அரசு மீனவர்களைத் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. எனவே நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்' என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர். 

இரா.மோகன்
படம்: உ.பாண்டி

நீங்க எப்படி பீல் பண்றீங்க