விஷ்ணுப்பிரியா வழக்கில் அவகாசம் கேட்கும் சிபிஐ

டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா மரணத்தில் உண்மையை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு, ஆகஸ்ட் 18-ம் தேதி, திடீரென விஷ்ணுப்பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் வழக்கை முடிக்க சி.பி.ஐ.க்கு கால அவகாசம் அளித்தது. 

DSP Vishnupriya
 

இந்நிலையில், விசாரணையை முடிக்க மேலும் நான்கு மாதங்கள் அவகாசம் கோரி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!