போயஸ் கார்டன் அருகில் குடியேறுகிறார் பன்னீர்செல்வம்! | O.Paneerselvam shifted his home near Poes garden

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (07/03/2017)

கடைசி தொடர்பு:17:48 (07/03/2017)

போயஸ் கார்டன் அருகில் குடியேறுகிறார் பன்னீர்செல்வம்!

சென்னை கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தை காலி செய்யும்படி தமிழக அரசு கூறிவிட்டதால், போயஸ் கார்டன் அருகில் உள்ள வீனஸ் காலனியில் உள்ள வீட்டில் குடியேறுகிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சர்கள் குடியேறுவது சென்னை கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள வீடுகளில்தான். முதல்வராக இருந்த பன்னீர்செல்வமும் கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள வீட்டில்தான் வசித்து வந்தார். இதனிடையே, முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ததோடு, சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார்.

இந்நிலையில், அமைச்சர்கள் மட்டுமே குடியேறும் கிரீன்ஸ்வேஸ் சாலையில் உள்ள வீட்டை காலி செய்யும்படி பன்னீர்செல்வத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசின் கெடு முடிய இன்னும் மூன்றே நாள்கள்தான் இருக்கிறது. இதனிடையே, போயஸ் கார்டன் அருகே உள்ள வீனஸ் காலனிக்கு பன்னீர்செல்வம் இன்று வந்தார். அங்கிருந்த வீடு அவருக்கு பிடித்துவிட்டதால் அந்த வீட்டில் அவர் குடியேறுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

- சி.தேவராஜன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க