வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (07/03/2017)

கடைசி தொடர்பு:17:34 (07/03/2017)

'மீன்கள்தான் உண்பதற்கு மீனவர்கள் அல்ல'- வைரமுத்து ஆவேசம்

இலங்கைக் கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில், தமிழக மீனவர் பிரிட்ஜோ நேற்று உயிரிழந்தார்.

Vairamuthu

இந்நிலையில், இலங்கைக் கடற்படையால், தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளில் 730 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மத்திய அரசு இனிமேலாவது தன் மெளனத்தைக் கலைத்துக்கொள்ள வேண்டும். இதுவே கடைசி மரணமாக இருக்கட்டும். மீன்கள்தான் உண்பதற்கு; மீனவர்கள் அல்லர்" என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க