'கச்சத்தீவை மீட்பதே பிரச்னைக்குத் தீர்வு!' - ஜெயக்குமார்

இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம், 'தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு, கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு. மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, மீனவர்களின் மீன்பிடி உரிமையைக் காப்பது மத்திய அரசின் கடமை. மீனவர் பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம்கொடுத்துவருகிறோம். 

Jayakumar

அமைச்சராக இல்லாமல், சாதாரண குடிமகனாகக் கூறுகிறேன். இந்தியா போன்ற நாட்டுடன் ஒப்பிடும்போது, இலங்கை ஒரு சுண்டைக்காய் நாடு. எனவே, மீனவர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!