உண்ணாவிரதத்தில், சசிகலாவுக்கு எதிராக மைத்ரேயன் ஆவேசம்!

கூவத்தூரில்... எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் மீது பதிவான வழக்குகளை, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்பி ஆவேசமாகக் கூறினார்.

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை கோரி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 36 இடங்களில் உண்ணாவிரதம் நடந்துவருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் மைத்ரேயன் எம்பி தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றுவருகிறது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மைத்ரேயன், கூவத்தூர் ரிசார்ட்டில் தன்னை அடைத்துவைத்ததாக மதுரை மேற்குத் தொகுதி எம்எல்ஏ சரவணன் கொடுத்த புகாரின் பேரில், எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் மீது கூவத்தூர் காவல்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

காஞ்சிபுரம் ஆட்சியர் கஜலட்சுமி திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளார். காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!