வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (08/03/2017)

கடைசி தொடர்பு:14:08 (08/03/2017)

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் ரயில் மறியல்!

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் சுட்டுக் கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் 'மீனவ விடுதலை வேங்கைகள்' கட்சி சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், மீனவர் பிரிட்ஜோ குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மீனவரின் படுகொலை, தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, 'மீனவ விடுதலை வேங்கைகள்' கட்சியினர் மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில், புதுச்சேரியில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

செய்தி, படங்கள்: அ.குரூஸ்தனம்

நீங்க எப்படி பீல் பண்றீங்க