அத்துமீறும் டிவி நிகழ்ச்சிகள்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

'சொல்வதெல்லாம் உண்மை' மற்றும் 'நிஜங்கள்' ஆகிய டிவி நிகழ்ச்சிகள் விதிகளை மீறுவதாகக் கூறி வழக்கறிஞர் எஸ்.எஸ். பாலாஜி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பாலாஜி கூறுகையில், 'சொல்வதெல்லாம் மற்றும் நிஜங்கள் நிகழ்ச்சியில் குடும்பங்களில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்படுகின்றன. அவர்கள் நீதிமன்றங்களைப் போல குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். குஷ்புவுக்கோ, லஷ்மி ராமகிருஷ்ணனுக்கோ ஒரு குடும்பத்துக்கு ஆலோசனை வழங்குவதற்குத் தகுதியில்லை.

TV shows

இவை முழுக்க முழுக்க விதிமுறைகளுக்குப் புறம்பானவை. அந்த நிகழ்ச்சிகளை பிரபலப்படுத்துவதற்காக குஷ்பு, லஷ்மி ராமகிருஷ்ணன் பயன்படுத்தப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சிகள் கேபிள் டிவி நெட்வொர்க் விதிமுறைகள் 1994, கேபிள் டிவி விதிமுறைகள் 1995 ஆகிய சட்டப்பிரிவுகளுக்கு எதிரானவை ' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!