ஒரு கான்கிரிட் வீடு கட்ட 3.15 லட்சம் ரூபாய்! முதல்வர் பழனிசாமி அசத்தல் திட்டம்

பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு கான்கிரிட்  வீடுகள் கட்டும் திட்டத்தினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். ஒரு வீடுகட்ட 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பேரூராட்சிப் பகுதிகளில் வாழும் சொந்த குடியிருப்பு வசதி இல்லாத பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு மத்திய மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் கான்கீரிட் வீடுகள் கட்டும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

2016-17-ம் ஆண்டில் 329 பேரூராட்சி பகுதிகளில் வாழும் பொருளாதாரத்தில் நலிந்த 50,170 பயனாளிகளுக்கு, ஒரு வீட்டுக்கு 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 1580 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கான்கிரிட்  வீடுகள் கட்டும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (9.3.2017) தலைமைச் செயலகத்தில், 5 பயனாளிகளுக்கு  பணிக்கான ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி  மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!