‘ஆர்.கே. நகரில் போட்டியிடுவேன், சசிகலா அணி டெபாசிட் இழப்பது உறுதி’ : தீபா

'ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்' என்று தீபா உறுதியாக அறிவித்துள்ளார். மேலும் கூட்டணி அமைக்கும் எண்ணம் இதுவரை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Deepa

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தீபா, ’எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் சின்னம் குறித்து ஆலோசித்து விரைவில் அறிவிப்பேன். சசிகலா அணியுடன் இணைந்து செயல்பட விருப்பமில்லை. திமுக மற்றும் சசிகலா அணியினர் தவிர மற்றவர்களின் ஆதரவை வரவேற்பேன். சசிகலாவின் சதிகார கூட்டம் ஆர்.கே.நகரில் டெபாசிட் இழக்கப் போவது உறுதி. சசிகலாவை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு நடந்த அநியாயத்துக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’, என்றார்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!