மீனவர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவப் பிரதிநிதிகளுடன் அரசுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மீனவப் பிரதிநிதிகளின் கோரிக்கையை அரசு ஏற்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் பிரிட்ஜோவை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக்கொன்றனர்.

அதனைக் கண்டித்து இறந்த மீனவரின் உடலை வாங்க மறுத்து மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் நேரில் வந்து மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதனையடுத்து மீனவர்களின் போராட்டம் தொடர்கிறது.

-உ.பாண்டி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!