வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (10/03/2017)

கடைசி தொடர்பு:16:42 (10/03/2017)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டி! திருமாவளவன் தகவல்

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களாக ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்யின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பங்கேற்கவில்லை.

இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளது. மூன்று கட்சிகளும் முடிவு செய்து ஓரிரு நாளில் இறுதி முடிவை அறிவிப்போம். அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ் பா.ஜ.க.வுக்கு மாற்றாக தொடர்ந்து செயல்படுவோம். மாற்றுத் திட்டத்தை முன்வைத்து மக்களைச் சந்திக்க உள்ளோம் என்றார்.

ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், மீனவர்களின் போராட்டத்துக்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும். உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க