வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (12/03/2017)

கடைசி தொடர்பு:13:12 (12/03/2017)

ஆட்சிமன்றக்குழு தலைவர் மதுசூதனன்! பன்னீர்செல்வம் அணி அதிரடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். அதேபோல், தீபாவும் ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சசிகலா தலைமையில் ஏற்கெனவே அதிமுக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில்,  அதிமுக ஆட்சி மன்றக் குழு தலைவராக மதுசூதனன் நியமிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தெரிவித்துள்ளனர்.. மேலும், அந்தக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன், மைத்ரேயன், செம்மலை, க. பாண்டியராஜன், மனோரஞ்சிதம் நாகராஜ், மாணிக்கம், நீலாங்கரை எம்.சி முனுசாமி, கோபால கிருஷ்ணன்,  மருதராஜ், ஜெயசிங் தியாரகராஜ் நட்டர்ஜி, செங்குட்டுவன், ஷேக் அயூப் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மசூதனன் கூறுகையில், 'அதிமுகவில் பொதுச்செயலளார் இல்லாதபோது, ஆட்சி மன்றக்குழுவை நியமிக்க அவைத் தலைவருக்குதான் அதிகாரம் உள்ளது' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க