புதுக்கோட்டையில் ஆய்வுக்காக மட்டும் புதுப் பொலிவடையும் ரயில் நிலையங்கள்!

கடந்த பிப்ரவரி மாதம் சதர்ன் ரயில்வே சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்க்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பெயின்ட் அடித்து மின் விளக்குகள், மின் விசிறி மற்றும் அனைத்து விதமான ஏற்பாடுகளும் அமோகமாக நடைபெற்று வந்தன. அதனைத் தொடர்ந்து ஆய்வுகளும் முடிக்கப்பட்ட நிலையில், பயணிகளுக்காக போடப்பட்டிருந்த மின்விளக்குகள், மின்விசிறிகள் என அனைத்தும் கழற்றும் பணி விரைவாக நடந்தது. 

புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக போடப்பட்டிருந்த மின்விசிறிகளை கழட்டிக்கொண்டிருந்த எலக்ட்ரீசியனிடம் இதுகுறித்து கேட்டபொழுது, 'இரவு நேரங்களில் மின்விளக்குகம் எரிந்தால் கூட, ஏன் இவற்றை போட்டுள்ளீர்கள் என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேட்கிறார். அதனால் தான் இரவு நேரங்க்களில் கூட ரயில்கள், ஸ்டேஷனுக்கு வருவதற்கு 5 நிமிடங்க்களுக்கு முன்னதாக மட்டுமே விளக்குகள் அனைத்தும் போடப்படுகின்றன. ஆய்வு முடிந்ததால் மின்விசிறிகளை கழட்டுகின்றோம். பிறகு மற்றொரு ஆய்வு நடக்கும்பொழுது மாட்டிவிடுவோம்' என்றார்.

வரிப்பணத்தில் வாங்கிய மின்விசிறிகள் அனைத்தும் ஆய்வுக்கு வரும்போது பயன்படுத்தப்பட்டு, பின்னர், ஓய்வெடுக்க ஸ்டோர்-ரூமுக்கு செல்கின்றன.

-ர.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!