வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (12/03/2017)

கடைசி தொடர்பு:18:50 (12/03/2017)

மீனவர் போராட்டக் களத்தில் பிரேமலதா விஜயகாந்த்!

இந்திய மீனவர் பிரிட்ஜோவை, இலங்கைக் கடற்படை சுட்டு கொன்றதையடுத்து, கடந்த ஆறு நாட்களாக தங்கச்சி மடத்தில் போராட்டம் நடந்து வருகிறது.  இந்நிலையில், தே.மு.தி.க.வின் பிரேமலதா விஜயகாந்த், இன்று தங்கச்சிமடம் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு அவர் ஆறுதல் கூறினார்.

இதையடுத்து அவர் பேசுகையில், " தே.மு.தி.க என்றைக்குமே மீனவர்களுக்கு குரல் கொடுத்து வரும் கட்சி. இனி எந்த மீனவனுக்கும் எந்த நிலையும் வரக்கூடாது . இதுதான் அவர்களின் கோரிக்கையாக உள்ளது. அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். கச்சத்தீவில் நடக்கும் திருவிழாவில் நம் மீனவர்கள் கலந்து கொள்ள கூடாது என்ற எண்ணமே இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்குமோ என நினைக்கிறேன்.

விஜயகாந்துக்கு பணிகள் இருப்பதால் வர முடியவில்லை. உங்கள் கோரிக்கை நிறைவேற மத்திய, மாநில ஆட்சியாளர்களை சந்திப்போம். 50 ஆண்டுகளாக தமிழகத்தின் பிரச்னைகள் தீரவில்லை. இந்த நிலை மாற நிலையான ஆட்சி அமைவதற்கான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். படகுகளை பிடிச்சுட்டு போயிருக்காங்க இதற்கு காரணம் எல்லை தாண்டுவதாக சொல்கிறார்கள்.

ஆனால் நம் மீனவர்கள் நமது எல்லைக்குள்தான் மீன்பிடிப்பில் ஈடுபடுவதாக அறிகிறோம். இது போன்ற நிலை மாற தற்போது தமிழ்நாட்டில் ஏற்படும். மீனவர் பிரச்சனையாக இருந்தாலும், இலங்கை தமிழர் படுகொலை ஆனாலும் சரி, ஹைட்ரோ கார்பன் பிரச்னை என்றாலும் சரி இவை எல்லாவற்றிற்கும் காரணம் தி.மு.க-வும், காங்கிரசும்தான்" என்றார்.

-ரா.மோகன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க