வெளியிடப்பட்ட நேரம்: 23:49 (12/03/2017)

கடைசி தொடர்பு:10:01 (13/03/2017)

'கூலிப்படைகள் மூலம் எனக்கு மிரட்டல்' - தீபா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில், தீபா 30 நிமிடங்களுக்கு மேலாக தியானம்செய்தார். பிறகு அவர் செய்தியாளர்களிடம், 'நான் அரசியலுக்கு வந்த பிறகு, எனக்கு கூலிப்படைகள்மூலம் தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. குறிப்பாக, ஆர்.கே.நகர் தேர்தலில் நான் போட்டியிடக் கூடாது என்று என்னை மிரட்டுகின்றனர். நான் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்று அறிவித்ததில் இருந்தே, எனக்கு மறைமுகமாகத் தொல்லைகள் கொடுத்துவருகின்றனர்' என்றார்.

Deepa

இந்நிலையில் அவர், தியானத்துக்காக மெரினா புறப்படுவதற்கு முன், தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,' நாளை முதல் ஆர்.கே.நகர் மக்களைச் சந்திக்க உள்ளேன். நான், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆனால், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இல்லை' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க