மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்! | Tamilnadu fishermen holds hungerstrike

வெளியிடப்பட்ட நேரம்: 08:14 (13/03/2017)

கடைசி தொடர்பு:09:01 (13/03/2017)

மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம்!

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை அரசைக் கண்டித்தும் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள 138 விசைப்படகுகளை விடுவிக்கக் கோரியும், தமிழக அரசு உயர்த்திய டீசல் மீதான வரியைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், நாகை  மாவட்ட மீனவர்கள் சார்பில், நாகை தலைமைத் தபால்நிலையம் முன்பு இன்று காலை 8.00 மணி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

Fishermen protest
 

மேலும், தமிழகத்தில் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் 43 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 60,000 பேர் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close