'ரேஷன் பொருள்கள் கிடைக்க உரிய நடவடிக்கை!'

ரேஷன் கடைகளில் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் பகுதியில் நீர்நிலைகளைப் புனரமைக்கும் குடி மராமத்துத் திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விவசாயிகளின் உதவியுடன் ஏரிகள், குளங்கள் புனரமைக்கப்படும். நீர் நிலைகளைத் தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது, விவசாயிகளுக்கு நன்மைபயக்கும் திட்டமாக இருக்கும். சென்னையில் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 20,000 மெட்ரிக் டன் பருப்பு கொள்முதல் செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்றும் தெரிவித்தார். மேலும், ரேஷன் கடைகளுக்கு முன் தி.மு.க நடத்திய போராட்டம் தேவையற்றது' என்றும் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!