வெளியிடப்பட்ட நேரம்: 19:34 (14/03/2017)

கடைசி தொடர்பு:19:46 (14/03/2017)

இடைத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு - காங்கிரஸ் அறிவிப்பு

 

Thirunavukkarasar

சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், 'வருகின்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் தி.மு.க-வுக்கு ஆதரவு தரும்' என்று கூறியுள்ளார்.  

திருநாவுக்கரசர், 'ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே நகரில் நடக்கவுள்ள இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்கும். நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதாக சொல்வது ஒரு மாயை. தான் ஆட்சி செய்து வந்த மாநிலமான பஞ்சாபில் பா.ஜ.க தோல்வியடைந்துள்ளது. கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரஸ் தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டு பா.ஜ.க ஆட்சியமைக்க உள்ளது.' என்று பேசியுள்ளார்.