'தினகரன் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை' - மாஃபா பாண்டியராஜன் பகீர்!

Maafa pandiarajan

அ.தி.மு.க சார்பில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் ஓ.பி.எஸ் அணி எம்.எல்.ஏ-வான மாஃபா.பாண்டியராஜன், 'டி.டி.வி.தினகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பாண்டியராஜன், '2011-ம் ஆண்டு ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்டவர் தினகரன். அவர் அ.தி.மு .க-வின் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது. வெளியேற்றப்பட்ட தினகரன், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரம் மன்னிப்புக் கோரி ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. யார் அவருக்கு மன்னிப்புக் கொடுத்தார்? அவைத் தலைவர் மதுசூதனனால் அவருக்கு மன்னிப்புக் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், அவர் அ.தி.மு.க-வின் ஆர்.கே.நகர்த் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது முறையற்றது. அது, சட்டபூர்வமான நடவடிக்கை இல்லை. ஓ.பி.எஸ் அவர்கள் ஆர்.கே.நகர்த் தொகுதிக்கான வேட்பாளரை இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பார்' என்று  தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!