வெளியிடப்பட்ட நேரம்: 19:56 (15/03/2017)

கடைசி தொடர்பு:08:39 (16/03/2017)

அ.தி.மு.க முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகரன் வீட்டில் ரெய்டு!

jcd.prabakaran

அ.தி.மு.க முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகரன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு நடத்துகின்றனர். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள அவரது வீட்டில் ரெய்டு நடந்தது. 2011-2016-ம் ஆண்டில் சென்னை வில்லிவாக்கம் தொகுதி எம்எல்ஏ-வாக பிரபாகரன் இருந்தார்.

பின்பு, 2016 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அமைதியாக இருந்தவர், சசிகலா - ஓ.பன்னீர் செல்வம் பிரிவுக்குப் பின்னர் திடீரென ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தந்தார். இந்நிலையில், அவரது வீட்டில் நடந்த திடீர் ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.