வெளியிடப்பட்ட நேரம்: 00:27 (16/03/2017)

கடைசி தொடர்பு:12:21 (24/03/2017)

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல்!

தங்கம் பறிமுதல்

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம்செய்த, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன், கேஸ் ரெகுலேட்டரில் மறைத்து எடுத்துவந்த, ரூ.8.67 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம் பறிமுதல்செய்யப்பட்டது. அதேபோல துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம்செய்த சென்னையைச் சேர்ந்த அபுதாகீர் என்பவரின் உடைமைகளைச் சோதனைசெய்தபோது, 4.9 லட்சம் மதிப்புள்ள ஆறு சோனி பிளே ஸ்டேஷன்கள், வெளிநாட்டு சிகெரெட் பாக்கெட்டுகள், பவர் பேங்க் ஆகியவற்றை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருச்சி விமான நிலைய வான்நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல்செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

- சி.ய.ஆனந்தகுமார்