Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

#Liveupdates தமிழக பட்ஜெட் : 2017-18-ல் பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் இல்லை

 

 

 

நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து.....

* முதலமைச்சர் மருத்துவ சிகிச்சைகளுக்கான காப்பீடு ரூ.2 லட்சம் உயர்வு.

* முதல் தலைமுறை பட்டதாரி திட்டத்துக்கு ரூ.680 கோடி ஒதுக்கீடு.

* தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ரூ22,815 கோடி கடனை அரசு ஏற்றுள்ளது.

* சட்டப்பேரவையை வருகின்ற 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.

* பட்ஜெட் உரை முடிந்தது. 2 மணி நேரம் 50 நிமிடம் பட்ஜெட் உரையை வாசித்தார் நிதி அமைச்சர் ஜெயக்குமார்.

* ஜி.எஸ்.டி முறை அமலுக்கு வர உள்ளதால் வரிச் சலுகைகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

* ஓய்வூதியம் திட்டத்துக்கு ரூ.22,394 கோடி.

* பிற மாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு வாடகை குடியிருப்புகள் அமைக்கப்படும்.

* ஜி.எஸ்.டி வரியை நடைமுறைப்படுத்தும் போது, தமிழகம் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்கும்.

* தமிழ்நாடு நகர்ப்பு மருத்துவ திட்டத்துக்கு ரூ.126 கோடி ஒதுக்கீடு.

* பிறந்த குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை கண்டறிய சென்னை, சிவகங்கையில் முன்னோடித் திட்டம்.

*  மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 1,000-ல் இருந்து 2,000 ஆக உயர்வு.

* 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5 கோடி செலவில் திறன் மேம்பாட்டு பயிற்சி.

* சமூக பாதுகாப்பு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.3,790 கோடி.

* 4,778 ஏரிகள், 47 அணைக்கட்டுகள் புனரமைக்கப்படும்.

* உழைக்கும் மகளிருக்கு ரூ.20,000 மிகாமல் இரு சக்கர வாகனம் வாங்க 50% மானியம் வழங்கப்படும்.

* அனைத்து திருமண உதவித் திட்டத்துக்கு ரு.723 கோடி ஒதுக்கீடு.

* ஜவ்வாது மலையில் 2 உண்டு உறைவிட மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும்.

* முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் மேலும், 312 சிகிச்சைகள் சேர்ப்பு.

* பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி 755-ல் இருந்து 900 ஆக உயர்வு.

* கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி 875-ல் இருந்து 1000 ஆக உயர்வு.

* உயர்கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு ரூ.1,580 கோடி ஒதுக்கீடு.

* இலவச மடிக்கணினி திட்டத்துக்கு ரூ.758 கோடி ஒதுக்கீடு.

* 2017-18-ல் பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் இல்லை.

* பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச திட்டங்களுக்கு ரூ.1,503 கோடி ஒதுக்கீடு.

* வெள்ளத்தடுப்பு, நீர் ஆதார திட்டங்களுக்கு ரூ.445.19கோடி ஒதுக்கீடு.

* 150 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

* 100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

* பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 352 கோடி ஒதுக்கீடு.

* 1 லட்சம் மகளிர் மானிய விலையில் ஸ்கூட்டர் வாங்குவதற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ. 1,348 கோடி ஒதுக்கீடு.

* குடிசை மாற்று வாரிய பழைய குடியிருப்புகள், மறு கட்டுமானம் செய்யப்படும்.

* மருத்துவக் கல்வி பட்டமேற்படிப்பு இடங்கள் 1,188-ல் இருந்து 1,362 ஆக உயர்வு.

* 12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

* பசுமைகள் வீடுகள் திட்டத்தில் ரூ.420 கோடியில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

* ரூ.43. 76 கோடியில் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

* பிரதம மந்திரி வீட்டு, வசதி திட்டத்தில் 1.70 லட்சம் மதிப்பில் 1.76 லட்சம் வீடுகள்.

* குறைந்த விலையிலான பொது மருந்து கடைகள் அமைக்கப்படும்.

* சிறு,குறு,நடுத்தர தொழில்துறைக்கு ரூ.532 கோடி ஒதுக்கீடு.

* தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 24.28 லட்சம் கழிவறைகள் கட்டப்படும்.

* தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 50 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்படும்.

* நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு.

* சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்துக்கு ரூ.61 கோடி ஒதுக்கீடு.

* முதலீடு ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ.1,295 கோடி.

* வறட்சியை சமாளிக்க புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும். ஏற்கெனவே உள்ள ஆழ்துளை கிணறுகள் புனரமைக்கப்படும்.

* மகப்பேறு உதவித் திட்டத்துக்கு ரூ,1,001 கோடி ஒதுக்கீடு.

* சுற்றுலாத்துறை மேம்படுத்த ரூ.403 கோடி ஒதுக்கீடு.

* ஊரக வளர்ச்சிக்கு ரூ. 16,665 கோடி ஒதுக்கீடு.

* தமிழக மக்கள் தொகையில் 48% பேர் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர்.

* அட்டல் நகர்ப்புற புத்துணர்வு திட்டத்துக்கு ரூ. 1,400 கோடி நிதி.

* இலவச, வேட்டி சேலை வழங்கும் திட்டத்துக்கு ரூ.490 கோடி

* உதகையில் ரூ. 5 கோடி செலவில் நகரக விற்பனை கண்காட்சித் திடல்.

* பிரதம மந்திரி கிராமப்புற சாலைத்திட்டத்திற்கு ரூ.758 கோடி ஒதுக்கீடு.

* தமிழகத்தில் மென்பொருள் ஏற்றுமதி ரூ.1,00,300 கோடியை எட்டும்.

* திறன்மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.1,200 கோடி.

* கைத்தறி துறைக்கு ரூ. 1,230 கோடி, கதர் துறைக்கு ரூ.194 கோடி

* உபரி காற்றாலை மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு கொண்ட செல்ல சிறப்பு வழித் தடம்.

* தருமபுரியில் ஒரு உணவுப் பொருள் குழுமம் வழங்கப்படும்.

* மூலதன மானியம் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்க தொழில்துறைக்கு ரூ.1,950 கோடி ஒதுக்கீடு.

* காஞ்சிபுரம் மற்றும் கரூரில் தலா ஒரு ஜவுளி குழுமம் அமைக்கப்படும்.

* ராமேஸ்வரத்தில் கடல் உணவுப் பொருள்கள் குழுமம் அமைக்கப்படும்.

* இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த 18 மீனவ படகுகளுக்கு தலா ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு.

* சோழிங்கநல்லூரில் புதிய தொழில்நுட்ப பூங்கா.

* தொழில் துவங்குவதற்கான ஒற்றைச் சாளர முறை மேலும் வலுப்படுத்தப்படும்.

* கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் திட்டம் தொடர்ந்து வழங்கப்படும்.

* காஞ்சிபுரத்தில் ரூ.130 கோடி செலவில் 330 ஏக்கர் பரப்பளவில் மருத்துவப் பூங்கா அமைக்கப்படும்

* 1,000 கிராமப்புற கோயில்களை புதுப்பிக்க ரூ 1 லட்சம் செலவில் கிராம கோயில் புதுப்பிக்கப்படும்.

* நீர்வளத்துறைக்கு ரூ.4,971 கோடி ஒதுக்கீடு. 

* அவினாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு.

* மெட்ரோ ரயில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வரை விரிவு.

* நிதிப்பற்றாக்குறை ரூ.2.79 சதவிகிதமாக இருக்கும்.

* 107.5 கி.மீ தொலைவுக்கு 3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை.

*  உதய் மின் திட்டத்தில் இணைந்ததால் கடன் வட்டி குறைந்து ரூ. 1,335 கோடி சேமிக்கப்படும்.

* உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்தாண்டு நடத்த ரூ.75 கோடி ஒதுக்கீடு.

* சாலைகள் அகலப்படுத்த மற்றும் புதிய பாலங்கள் கட்ட ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.

 

*  100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்.

* ஆண்டுதோறும் தனிநபர் மின்சார பயனீட்டு அளவு அதிகரித்து வருகிறது.

* நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.10,067 கோடி.

* சென்னை, புறநகர் சாலைத் திட்டங்களுக்கு ரூ.744 கோடி.

* ராமநாதபுரம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம்.

* குடிமராமத்து பணிகளுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு.

* சாலை பாதுகாப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* நீர்வள ஆதராங்களுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு.

* தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவை, 34 லட்சம் ஏக்கரில் இருந்து 39 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.

* உலகவங்கி உதவியுடன் ரூ. 3,042 கோடியில் நீர், நில வளத்துக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* தாமிரபரணி, நம்பியாறு அணைகளை இணைப்புக்கு ரு.300 கோடி

* ரேஷன் கடையில் பருப்புகள் தொடர்ந்து மானிய விலையில் வழங்கப்படும்.

* உணவுப் பொருள் மானியத்துக்காக ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.

* அரசின் சார்பில் விலைக் கட்டுப்பாடுக்கு புதிய பொருள்கள் விற்கப்படும்.

* ஏழைகளுக்கு 12,000 பசுகள், 6,000 ஆடுகள் வழங்கப்படும்.

*  கடல் அரிப்பை தடுக்க ரூ.20 கோடியில் புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தப்படும்.

* 25 கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.

* சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.3,790 கோடி

* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி ஒதுக்கீடு.

* தொழிலாளர் நலத்துறைக்கு 1,010 கோடி 

* மீனவர்களுக்கு ரூ. 85 கோடி செலவில் 5,000 வீடுகள்.

* மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.5,000 உதவித்தொகை.

* படகு, டீசல் அளவு 15,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக உயர்வு.

* விதை உற்பத்தியை வலுப்படுத்த ரூ.50 கோடியில் திட்டம்.

* ஆவின் பால் பொருள்களை பிரபலப்படுத்த 200 புதிய பாலகங்கள்.

* நாட்டு மாடு இனப்பெருக்கத்துக்கு புதிய திட்டம்.

 

* வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட கூடுதலாக 590 மையங்கள் அமைக்கப்படும்.

* உழவர் உற்பத்திக் குழுவுக்கு ரூ.100 கோடி.

*  கோழிப்பண்ணை வளர்ச்சிக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

* 2 லட்சம் விவசாயிகள் பயன்படும் வகையில் உழவர் உற்பத்திக் குழு அமைக்கப்படும்.

* உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நிவாரண உதவி ரு.20,000 ஆக உயர்வு.

* பயிர் காப்பீடு மானியத்திற்கு ரூ. 522 கோடி நிதி ஒதுக்கீடு

* பள்ளிக் கல்வித்துறைக்கு ரு.26,932 கோடி

* உயர்க் கல்வித்துறைக்கு ரூ. 3,680 கோடி

* பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு  ரூ.988 கோடி நிதி

* 2017-18-ல் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை தயாரிக்க திட்டம்.

* அகதிகள் நலனுக்கு ரூ.116 கோடி.

* காவல்துறை வீட்டு வசதிக்கு ரூ.450 கோடி

* குறைந்த நீரில், நீடித்த நவீன கரும்பு சாகுபடிக்கு ஊக்குவிக்கப்படும்.

* பழங்குடியினர் துறைக்கு ரூ.265 கோடி

* நீதித்துறை மேம்பாட்டுக்கு ரூ.983 கோடி

* ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.

* 10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

* தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி

* இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.

* ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி

* இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்

* மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட பணிக்கான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

* அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியை, மாநில அரசு எதிர்நோக்கியுள்ளது.

* சுகாதாரத்துறைக்கு ரூ.10, 158 கோடி

* சிறைத்துறைக்கு ரூ.282 கோடி

* காவல்துறைக்கு ரூ 6,483 கோடி

* உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி.

* மின்சாரம் எரிசக்தி துறைக்கு ரூ.16,998 கோடி

* கோவை, திருச்சி, மதுரையில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

* நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 13,996 கோடி

* தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு

* தமிழ்பல்கலைக்கழகத்துக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு

* தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு

* 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி

*  கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,161 கோடி


*  தமிழக அரசின் மொத்த கடன் ரூ 3,14,166 கோடி 

*  உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு.

*  மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது

*  ஊரகப்பகுதிகளில் 135 இடங்களில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* ஐடி துறைக்கு ரூ.116 கோடி

*  போக்குவரத்துறைக்கு ரூ.2,191 கோடி

*  வணிகவரி மூலம் ரூ.77,234 கோடி வருவாய் கிடைக்கும்.

*  நெடுஞ்சாலை துறைக்கு 10,067 கோடி ஒதுக்கீடு

* குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி.

* அரசின் மொத்த செலவு ரூ. 1,75,351 கோடி.

* 2017-18-ல் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும்

* ஜெயலலிதா அளித்துள்ள 164 வாக்குறுதிகளில் 60 வாக்குறுதிகள் நிறைவேற்றம்.

* கூட்டுறவுத்துறைக்கு ரூ.1,830.50 கோடி.

* மகப்பேறு உதவி ரூ.12,000 முதல் 18,000 ஆக உயர்வு

* கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி புதிய கடன் வழங்க நடவடிக்கை.

* மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி

* மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி.

* மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 99,590 கோடி.

* தமிழகத்தில் ரூ. 3, 14, 366 கோடி கடன்.

* தமிழகத்தில் ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை.

* 2017-18-ல் ரூ.15,930 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தபோது கூறினார்.

* எதிர்க்கட்சிகள் அமைதி காக்க பேரவைத் தலைவர் வலியுறுத்தல்

* சசிகலா பெயரை குறிப்பிட்டதை அவை குறிப்பில் இருந்து நீக்க எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்.

* சட்டசபையில் மாண்புமிகு சின்னம்மா என்று ஜெயக்குமார் சொன்னதால், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு. அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

* சட்டசபையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழாரம்.

* சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது.

* முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் சட்டசபைக்கு வருகை.

* சட்டசபைக்குள் நுழைந்த போது, காவல்துறை அதிகாரிகளின் பெயரைக் கேட்டார் மு.க.ஸ்டாலின்

M.K. Stalin

படம்: கே.ஜெரோம்

* தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வருகை.

* எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டசபைக்கு வருகை.

*ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்

* ஜெயலலிதா நினைவிடத்தில் நிதிநிலை அறிக்கையை வைத்து, நிதி அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலிசெலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், ’மக்களுக்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்’, என்றார்.

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. பேரவைக் கூட்டத்தில் காலை 10.30 மணிக்கு, 2017-2018 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தாக்கல்செய்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க அரசு தாக்கல்செய்யப்போகும் பட்ஜெட் இது. அதுமட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்.

ஜெயக்குமார்

படம்: கே.ஜெரோம்

இன்று, பட்ஜெட் தாக்கல்செய்யப்பட உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கோட்டை நுழைவுவாயில் மற்றும் தலைமைச் செயலக வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement