வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (16/03/2017)

கடைசி தொடர்பு:14:29 (16/03/2017)

நசீம் ஜைதியைச் சந்தித்த சசிகலா ஆதரவு எம்பி-க்கள்!

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை சசிகலா ஆதரவு எம்.பி-க்கள் மற்றும் அமைச்சர்கள் நேரில் சந்தித்துள்ளனர். அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட விவகாரம், கட்சியின் இரட்டை இலைச் சின்ன விவகாரம் தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.

இந்த வழக்கில், தேர்தல் ஆணையத்தின் கேள்விகளுக்கு சசிகலா 70 பக்க விளக்கத்தை அளித்தார். இதனையடுத்து, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், நேற்று  தேர்தல் ஆணையர் நசீம் சைதியை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். இந்நிலையில், மக்களவை துணைச் சபாநாயகர் தம்பிதுரை தலைமையில், சசிகலா ஆதரவு அ.தி.மு.க அமைச்சர்கள் 4 பேர் மற்றும் எம்பி-க்கள் உட்பட 20  பேர் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்துள்ளனர்.